சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்ட கரிய விழி கண்ணம்மா வானக் கருமை கொலோ
பட்டு கருநீல புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடு நிசியில் தெரியும் நக்ஷத்திரங்களடி
சோலை மலர் ஒளியோ உனது சுந்தர புன்னகை தான்
நீல கடல் அலையே உனது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயில் ஓசை உனது குரலின் இனிமையடி
வாலை குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் எதுக்கடி?
ஆத்திரம் கொண்டவற்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி?
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இது பார்! கன்னத்தில் முத்தம் ஒன்று.